காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விசாகன், சினிமாவில் இயக்குனராக உள்ளார். கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 படங்களை இயக்கி உள்ளார். இப்போது பொன்னியின் செல்வன் நாவலை வெப்சீரிஸாக உருவாக்கும் பணியில் இறங்கி உள்ளார். இதனிடையே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக ‛ஹூட்' என்ற செயலியை துவங்கி உள்ளார். இந்த செயலியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் எந்த மொழியிலும் குரலிலேயே பதிவிடலாம், பகிரலாம்.
இந்த செயலியின் துவக்க விழா இன்று(அக்., 25) சென்னையில் நடந்தது. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி டில்லியில் உள்ளார். அங்கிருந்தபடியே தனது குரலில் பதிவிட்டு இந்த செயலியை துவக்கி வைத்தார். ரஜினி கூறுகையில், “ஹூட் செயலியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. இனி எழுதப் படிக்க தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள், கருத்துக்களை அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கலாம். அருமையான கண்டுபிடிப்பு. டுவிட்டர், பேஸ்புக் போன்று பிரபலமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.