'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மும்பை : போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைதாகி உள்ளார். சிறையில் உள்ள அவரை ஷாரூக்கான் சந்தித்துவிட்டு வந்த நிலையில் ஷாரூக் வீடு மற்றும் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதால் அந்த பகுதியே பரபரப்பானது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கப்பலி்ல் சென்றனர். அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஜாமின் கிடைக்காததால், மும்பையில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார்.
![]() |
இந்நிலையில் ஆர்யனை சிறையில் சந்தித்து இன்று(அக்., 21) பேசினார் ஷாருக்கான். ஆர்யன்கான் கைதான பிறகு, தந்தை மகன் இடையே நிகழும் முதலாவது சந்திப்பு இதுவாகும். கைதிகளை சந்திக்க மஹாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நடந்த இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது தந்தை மற்றும் தாயாருடன் ஆர்யன்கான் வீடியோ கால் மூலம் பேசினார்.
![]() |