'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சமீபத்தில் மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடந்ததாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சோதனை செய்யப்பட்டது. அப்போது நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் அங்கே இருந்த காரணத்தினால் அவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதில் தொடர்புடைய பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பலரது வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் இன்று காலை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்றனர். முதலில் இது ரெய்டு என தகவல் வந்தது. பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள நோட்டீஸ் வழங்கி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். மேலும் இவர் ஷாருக்கானின் சகோதரி சுஹானா கானும் நெருங்கிய நட்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனன்யா பாண்டே இந்த பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அதில் கலந்து கொண்ட ஆர்யன்கானுடன் இதுகுறித்து சாட்டிங் செய்து இருந்ததால் அவரையும் சந்தேக வளையத்தில் கொண்டு வந்து போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.