ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவது அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமல்ல என்று கூறியுள்ள கஸ்தூரி அந்த நிகழ்ச்சியை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துடன் ஒப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸின் முன்னாள் போட்டியாளரான கஸ்தூரி அந்த நிகழ்ச்சியை விமர்சித்து பதிவிட்டுள்ள டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை தன்னைப் போலவே ஒரு எபிசோடு கூட முழுசா பார்க்காத நபர் யாராவது இருக்கிறீர்களா? அப்படி முழு எபிசோசடையும் பார்க்க முடியாதவர்களுக்கு என்னுடைய ஆறுதல் அரவணைப்பு' என்று பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த டுவீட்டில் ஸ்டார் விஜய், கம்பெனி ஆர்டிஸ்ட், 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம் ஆகிய ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை கம்பெனி ஆர்டிஸ்டுகளுக்கான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் எனவும் கிண்டலடித்துள்ளார். இதற்கு சில ரசிகர்கள் 'அப்புறம் எதுக்கு மேடம் நீங்க பிக்பாஸ் போனீங்க' என கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு தொலைக்காட்சி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக தனக்கு பேசியபடி தொகையை கொடுக்கவில்லை என சர்ச்சையை கிளப்பினார்.