ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் சீசன் 5' நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. முந்தைய சீசன்களை விட இந்த 5வது சீசனுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாக டிவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமாகும் முதல் நாளில் யார் யார் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள பலரும் நிகழ்ச்சியைப் பார்ப்பார்கள். ஆனால், இந்த சீசனில் அதற்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.
முதல் கோணலே முற்றும் கோணல் என்பார்கள் அது போல தொடர்ந்து வார நாட்களிலும் எதிர்பார்த்த ரேட்டிங்கை நிகழ்ச்சி தரவில்லை என்பது நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், சேனல்காரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.
இந்த முறை பல போட்டியாளர்கள் யார் என்றே தெரியாத அளவிற்குத் தேர்வு செய்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள். அதிலும் மாடலிங் துறையிலிருந்துதான் அதிக போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
சினிமாவிலிருந்து ஓரளவிற்காவது பிரபலமான நடிகரோ, நடிகையோ கலந்து கொள்வார்கள். அது இந்த சீசனிலும் இல்லாமல் போய்விட்டது. எனவே விரைவில் 'வைல்டு கார்டு' என்ட்ரி மூலம் சில பிரபலமானவர்களை வீட்டிற்குள் அனுப்பலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம்.
மேலும், ஐபிஎல் போட்டி, அடுத்து டி 20 உலகக் கோப்பை ஆகியவற்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பாதிப்பு உள்ளதாகம் சொல்கிறார்கள். ஒருவேளை இந்த வருட ரேட்டிங்கில் பெரிய மாற்றம் வரவில்லை என்றால் கமல்ஹாசனும் இந்த வருடத்துடன் நிகழ்ச்சியை விட்டு விலகவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.