ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் வந்தால் படம் பார்ப்பவர்களை எச்சரிக்கும் விதத்தில் அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறம். அது போல திரைப்படங்கள் சம்பந்தமான விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென நீண்ட நாட்களாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பதில்லை என முடிவு செய்து அதைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், சில நடிகர்கள் எந்த விதமான சமூக அக்கறையும் இல்லாமல் தொடர்ந்து தங்களது பட விளம்பரங்களில் புகை பிடிக்கம் புகைப்படங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நடிகர் தனுஷ் இன்று முதல் நடிக்க ஆரம்பித்துள்ள 'நானே வருவேன்' படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் தனுஷ் சுருட்டு பிடிக்கும் புகைப்படத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இப்படத்திற்காக இதற்கு முன்பு வெளியிடப்பட்ட போஸ்டரிலும் இப்படி புகை பிடிப்பதைப் பயன்படுத்தியிருந்தனர். அப்போது அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது மீண்டும் அதே தவறைச் செய்துள்ளனர்.
சினிமாவில் அதிகமான புகைபிடிக்கும் காட்சிகளை வைத்த ரஜினிகாந்த்தே அதை விட்டுவிட்ட போது, அவரது மருமகன் இன்னும் அந்தக் காட்சிகளைத் தொடர்வது சரியா என்ற எதிர்ப்புக் குரல் எழுகிறது.