'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த 'அண்ணாத்த' படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு அக்டோபர் 14ம் தேதி யு டியூபில் வெளியானது. நேற்று வரை யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்த 'அண்ணாத்த' டீசருக்குப் போட்டியாக சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' டீசர் நேற்று யு டியூபில் வெளியானது.
ஒரு நாளைக்குள்ளாகவே 'அண்ணாத்த' டீசரின் பார்வைகளை 'ஜெய் பீம்' டீசர் கடந்துவிட்டது. 'அண்ணாத்த' டீசர் தற்போது 61 லட்சம் பார்வைகளுடன், 4 லட்சம் லைக்குகளுடன் டிரெண்டிங்கில் 2ம் இடத்தில் உள்ளது.
'ஜெய் பீம்' டீசர் 65 லட்சம் பார்வைகளுடன், 2 லட்சம் லைக்குகளுடன் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. ரஜினிகாந்த் பட டீசரை விட சூர்யா பட டீசர் முந்துவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.
'ஜெப் பீம்' படம் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு வக்கீலின் கதை என்பதால் இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. 'அண்ணாத்த' படம் வழக்கமான மசாலாப் படம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.