'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், சிரஞ்சீவியின் உறவினருமான நடிகர் சாய் தரம் தேஜ், கடந்த மாதம் ஐதராபாத்தில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
அதன்பிறகு சுயநினைவை இழந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது காலர் போன் உடைந்ததாகவும், மேலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் சொன்னார்கள். கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளாராம். உடனடியாக தனது அடுத்த பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள சாய் விரும்பியதாகவும், ஆனால், அவரை இரண்டு மாதம் முழு ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
இன்று அவருடைய பிறந்தநாளுக்கு முன்னதாகவே வீடு திரும்பியது குறித்து குடும்பத்தினரும், உறவினர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.