50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' |
சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் டீசரை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள்.
டீசரைப் பார்த்த பலரும் இது என்ன 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாம் பாகமா என கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு இரண்டு படங்களுக்கும் வித்தியாசமில்லை என்று சொல்லும் அளவிற்கு டீசர் இருப்பதாக பெரும்பான்மையான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஒரு சிலர் ஒரு படி மேலே போய், 'விஸ்வாசம்' படக் காட்சிகளையும், 'அண்ணாத்த' டீசர் காட்சிகளையும் புகைப்படங்களாக இணைத்து எங்கே வித்தியாசம் உள்ளது என மீம்ஸ்களையும் தெறிக்க விட்டுள்ளனர்.
'விஸ்வாசம்' படத்தில் 50 வயது அஜித் 70 வயது தாத்தா போல வெள்ளை முடி, தாடியுடன் இருப்பார். 'அண்ணாத்த' படத்தில் 70 வயது ரஜினிகாந்த் 50 வயது மனிதர் போல கருப்பு முடி, தாடியுடன் இருக்கிறார். இது மட்டும்தான் வித்தியாசம் என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.
விமர்சனம், கமெண்ட், கருத்து ஆகியவை பலவாறாக இருந்தாலும் 'அண்ணாத்த' டீசர் 43 லட்சம் பார்வைகளைக் கடந்து, யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.