அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

நடிகர் வெற்றி தயாரித்து நடித்த படம் ஜீவி. 2019ம் ஆண்டு வெளிவந்தது. வி.ஜே.கோபிநாத் இயக்கி இருந்தார். மோனிகா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. இதனையும் வி.ஜே.கோபிநாத்தே இயக்கவுள்ளார். சுரேஷ் காமாட்சி தனது வி கிரியேஷன் சார்பில் தயாரிக்கிறார். இதிலும் வெற்றி நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த தகவலை படத்தின் எடிட்டர் கே.எல்.பிரவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது: ஜீவி திரைப்படத்தின் தொடர்ச்சியாக அருமையான ஒரு கதையைக் கேட்டேன். மீண்டுமொரு முக்கோண விதி, இம்முறை அதிக அழுத்தத்துடன் ஜீவி 2 உருவாகிறது, இந்த குழுவினருக்குச் சிறப்பான படமாக அமையும். என்று எழுதியுள்ளார்.