ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளின் பிக்பாஸ் நிகழ்ச்சியும் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்ட நிலையில் மற்ற மொழி நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள், அந் நிகழ்ச்சியின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாரம்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், மலையாள பிக்பாஸ் தொழில் நுட்பக் கலைஞர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், போதிய தடுப்பு நடவடிக்கைகளோடு, பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இனி எந்த படப்பிடிப்பும் 31ந் தேதி வரை நடைபெறாது என்று பெப்சி அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்து மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமா என்று தெரியவில்லை. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.