'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு இயக்குனர் சுரேஷ்பாபுவின் மகன்களில் ஒருவரான ராணா டகுபதி, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததை தொடர்ந்து, தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக ஒரு இடத்தை பிடித்து நின்றுவிட்டார். இதையடுத்து அவரது தம்பி அபிராம் டகுபதியும் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை அவரே கூறி இருக்கிறார். நடிகை ஸ்ரீரெட்டி காஸ்டிங் கவுச் பற்றி வெளியிட்ட அதிரடி தகவல் மூலம், பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்தவர் தான் இந்த அபிராம்..
தான் அறிமுகமாகும் படம் பற்றி அபிராம் கூறும்போது, “என் தாத்தாவின் ஆசை என்னையும் நடிகனாக்கி பார்க்கவேண்டும் என்பது.. அவர் இருந்திருந்தால் அது முன்கூட்டியே நடந்திருக்கும். தற்போது எனது தந்தையின் ஆதரவுடன் ஹீரோவாக அறிமுகமாகிறேன். ஏற்கனவே 'நானே ராஜா நானே மந்திரி' பட தயாரிப்பில் இயக்குனர் தேஜாவுடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன். அவர் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றுள்ளனர். மேலும் அவர் சொன்ன கதை என் மாமா வெங்கடேஷ், சகோதரர் ராணா உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே பிடித்துவிட்டது. தற்போதிருக்கும் நிலைமை சீரானதும் பட வேலைகள் தொடங்கும்” என கூறியுள்ளார் அபிராம் டகுபதி.