''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தெலுங்குத் திரையுலகத்தினர் தற்போது நல்லதொரு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கொரோனா தொற்றுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் மற்ற மொழி திரையுலகினர் தள்ளாடிக் கொண்டிருக்கையில் அங்கு சில படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது அவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதில் ஆச்சரியமில்லை.
ரவி தேஜா, ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவந்த கிராக், அடுத்து புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்து வெளிவந்த உப்பெனா ஆகிய படங்கள் வசூலை அள்ளித் தந்தன. அந்த வரிசையில் நகைச்சுவை நடிகர்கள் சிலர் நாயகர்களாக இணைந்து நடித்த ஜதி ரத்னலு படத்தின் வெற்றியும், வரவேற்பும் அவர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது.
கே.வி.அனுதீப் இயக்கத்தில் ரதன் இசையமைப்பில், நவீன் பொலிஷெட்டி, பிரியதஷி, ராகுல் ராமகிருஷ்ணன், பரியா அப்துல்லா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ஜதி ரத்னலு. இப்படத்தை நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநடி படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தயாரித்துள்ளார். படத்தில் கீர்த்தி சுரேஷ், விஜய் தேவரகொண்டா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தைப் பாராட்டி மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களும் பதிவிட்டதால் படம் எதிர்பார்த்ததை விடவும் வசூலைக் குவித்து வருகிறதாம். தமிழ் ரீமேக்கிற்கு இந்நேரம் சிலர் போட்டி போட ஆரம்பித்திருப்பார்கள்.