2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

படமும் இல்லாமல், நடித்த படமும் ரிலீஸாகாமல் சில நாட்கள் முன்பு வரை ஒருவித விரக்தி நிலையில் இருந்தார் ஜெயராமின் மகன் காளிதாஸ். ஆனால் பூமரம் படத்திற்குப்பின் நிலைமை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. ஆம் கால்ஷீட் பற்றாக்குறையால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தில் இருந்து விலகும் அளவுக்கு பிசியாக மாறிவிட்டார் காளிதாஸ் ஜெயராம்.
சில வாரங்களுக்கு முன்பு மலையாள இயக்குனர் ஆசிக் அபு டைரக்சனில் வைரஸ் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் காளிதாஸ். ஆனால் அதையடுத்து ஜீத்து ஜோசப், சந்தோஷ் சிவன்,அல்போன்ஸ் புத்ரன் என பெரிய இயக்குனர்களின் படங்களில் ஒப்பந்தமாகி விட்டதால், வைரஸ் படத்தில் நடிக்க இயலவில்லை என விலகி கொண்டாராம். இதனால் கோபமான ஆசிக் அபு தனது படங்களில் தொடர்ந்து சிறிய கேரக்டர் ஒன்றில் நடித்துவரும் ஸ்ரீநாத் பாஷியை அந்த கேரக்டரில் நடிக்க வைக்கிறாராம்.