ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

பொதுவாகவே நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராக மாறுவதுண்டு. ஆனால் ஆடியோகிராபர்கள் (ஒலிப்பதிவாளர்கள்) இயக்குனராவது அபூர்வமானது. சமீத்திய உதாரணமாக ரசூல் பூக்குட்டியை சொல்லலாம். ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனரான ஒலிப்பதிவாளர் வி.எஸ்.ராகவன் (நடிகர் வி.எஸ்.ராகவன் அல்ல).
பிரபல ஆங்கில ஒலிப்பதிவாளர் சி.இ.பிக்ஸ் என்பவரிடம் தொழில்கற்று ஏவிஎம் நிறுவனத்தில் தலைமை ஒலிப்பதிவாளராக பணியாற்றினார். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த இவர் பின்னர் ரேவதி புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தார். 'மனிதனும் மிருகமும், மேதாவிகள்' படங்களை தயாரித்தார், 'கள்வனின் காதலி, சமய சஞ்சீவி, சாரங்கதாரா, மணிமேகலை, சந்திரிகா' ஆகிய படங்களை இயக்கினார்.
பின்னர் தயாரிப்பு, இயக்கம் இரண்டும் தனக்கு சரிப்பட்டு வரவில்லை என்பதை உணர்ந்து கடைசி வரை தனது ரேவதி ஸ்டூடியோவை மட்டும் நடத்தி வந்தார். ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்தார், நடிகை ஆர்.பத்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.