எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி | சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு |

பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து 'ஸ்பிரிட், பவ்ஜி' என புதிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சீதாராமம் புகழ் ஹனுராகவ புடி இயக்கத்தில் உருவாகி வரும் 'பவ்ஜி' என்கிற படத்தில் முன்னணி ஹீரோயின்கள் யாரையும் கதாநாயகியாக தேர்ந்தெடுக்காமல் இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலமான இமான்வி இஸ்மாயில் என்பவரை பிரபாஸுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார்கள்.. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அடுத்ததாக பவன் கல்யாண் படத்திலும் அவருக்கு ஜோடியாக இமான்வி இஸ்மாயில் நடிக்க இருக்கிறார் என்கிற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அடுத்ததாக பவன் கல்யாண் நடிக்க இருக்கும் படத்தில் அவரது கதாநாயகியாக தேர்வு செய்யப்பட உள்ள நடிகைகள் பட்டியலில் இமான்வி பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் ஒரு அறிமுக நடிகை இரண்டு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது என்பது உண்மையிலேயே அவருக்கு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.




