சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இதற்காக பெரும்பாலும் விமானத்தில் பறந்தபடியே தான் இருக்கிறார் மனிதர். அப்படி சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்றபோது சக பயணிக்கு நடந்த அவமானம் துல்கரை கோபம் கொள்ள செய்திருக்கிறது.
இதுகுறித்து சோஷியல் மீடியாவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள துல்கர் சல்மான், "நான் பல விமான நிலையங்களின் சோதனை செய்யும் இடங்களிலும், வெளியேறும் வாயில்களிலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் மோசமான நடத்தைகளை பார்த்துள்ளேன். உங்கள் பயணியர் அனைவரும் ஒரு மோசமான அனுபவத்துடன் தான் வீட்டிற்கு போக வேண்டும் என நினைக்கிறீர்களா..? என காட்டமாக கேட்டுள்ளார்.




