சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாள திரையுலகில் கமர்ஷியல் வெற்றிக்காக படம் இயக்காமல், தேசியவிருது மற்றும் சர்வதேச விருதுகளை குறிவைத்து படம் இயக்குபவர் தான் டாக்டர் பைஜூ. அதேசமயம் சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி சிக்கலில் சிக்குவது இவரது வழக்கம். குறிப்பாக மோகன்லால் குறித்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விமர்சித்து வருகிறார் டாக்டர் பைஜூ.
இவர் மோகன்லாலிடம் ஏற்கனவே ஒருமுறை கதை சொல்லி, அதை மோகன்லால் நிராகரித்துவிட்டார் என்பதும் இதற்கு முக்கிய காரணம்.. இந்தநிலையில் விரைவில் நடைபெற உள்ள கேரள அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றுள்ள மோகன்லால் சீப் கெஸ்ட்டாக அழைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள டாக்டர் பைஜூ, "மோகன்லால் பொறுப்பேற்றுக்கொண்ட பின், நடிகர்சங்கமே பெண்களுக்கு எதிரான சங்கமாக மாறி வருகிறது. இதனால் இந்த விருது வழங்கும் விழாவில் மோகன்லால் கலந்துகொண்டால் நான் இந்த விழாவை புறக்கணிப்பேன்" என காமெடி பண்ணியுள்ளார் டாக்டர் பைஜூ..