சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் நிவின்பாலி தற்போது நடித்து வரும் 'காயங்குளம் கொச்சுன்னி' படத்தில் முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் நேற்று முதல் கலந்து கொண்டு நடித்து வருகிறார் கெஸ்ட் ரோல் என சொல்ல முடியாத அளவுக்கு சற்றே நீட்டிக்கப்பட்ட கேரக்டரில் நடிக்கிறார் மோகன்லால்.
கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே வாழ்ந்த திருடன் 'காயம்குளம் கொச்சுன்னி' கேரக்டரில் நிவின்பாலி நடிக்கிறார் என்றால், அவரது சீனியராக அதாவது ராபின்ஹூட் பாணியில் கேரளாவில் உருவாகிய முதல் கொள்ளையனான 'இதிக்கரா பக்கி' என்கிற கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார்.
கதை எண்பதுகளில் நடக்கிறது என்பதால் மோகன்லாலின் கெட்டப் எப்படி இருக்கும் என்கிற ஆவல் இயல்பாகவே ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அவர்களை ரொம்பவும் காக்க வைக்காமல், மோகன்லாலின் கேரக்டர் லுக்கை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு மோகன்லால் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார் நிவின்பாலி