சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தற்போது பிருத்விராஜ் - பார்வதியை வைத்து 'மை ஸ்டோரி' என்கிற படத்தை இயக்குவதுடன் தானே தயாரிக்கவும் செய்கிறார் ரோஷினி தினகர் என்கிற பெண் இயக்குனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தபடத்திற்கு பிருத்விராஜ் சரியாக கால்ஷீட் ஒதுக்க மறுக்கிறார் என ஒரு சர்ச்சையை கிளப்பினார் ரோஷினி தினகர். ஒருவழியாக அந்த பஞ்சாயத்து முடிந்து தற்போது முக்கால்வாசி படம் முடிவடைந்துள்ளது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் வெளியான இந்தப்படத்தின் பாடல் காட்சிக்கு யூடியூப்பில் லைக்குகளை விட டிஸ்-லைக்குகள் வெகுவாக குவிந்து வருகின்றன. நேற்று 65 ஆயிரமாக இருந்த இந்த எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இதற்கு காரணம் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பார்வதி, சமீபத்தில் மம்முட்டி குறித்து விமர்சித்தது தான். அவருக்கு எதிர்ப்பை காட்டவே மம்முட்டி ரசிகர்கள் இந்த அதிரடியில் இறங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் ரோஷினி தினகர், “பார்வதி சொன்ன கருத்துக்காக என் படத்தின் மீது ஏன் உங்கள் கோபத்தை காட்டுகிறீர்கள்” என அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்..