வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
இந்தியாவின் மோஸ்ட் வான்டட் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் தான் சந்தோஷ் சிவன்.. பொதுவாக இங்கே பலருக்கும் சந்தோஷ் சிவனை ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, ஒரு நடிகராக என பல தளங்களில் இயங்கி வருபவர் என பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவையெல்லாம் மலையாளத்தில் தான்.
ஆகஸ்ட் சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர்களில் இவரும் ஒருவர். ஒரு இயக்குனராக மலையாளத்தில் 'உருமி' மற்றும் 'ஆனந்தபத்ரம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் சந்தோஷ் சிவன். இந்த இரண்டு படங்களிலும் பிருத்விராஜ் தான் கதாநாயகன். இதை தொடர்ந்து அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சந்தோஷ் சிவன்..
மம்முட்டி-ரஜினி நடித்த தளபதி'க்கு ஒளிப்பதிவு செய்த இவர்தான் சில மாதங்களுக்கு முன் வெளியான மம்முட்டியின் 'தி கிரேட் பாதர் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார். அந்தவகையில் மம்முட்டியுடன் நட்பில் இருக்கும் சந்தோஷ் சிவன், அடுத்ததாக மம்முட்டியை வைத்து படம் இயக்க இருக்கிறார். இந்த தகவலை ஸ்பைடர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் வைத்து தெரிவித்துள்ளார் சந்தோஷ் சிவன்.
ஏ.ஆர்.முருகதாஸின் டைரக்சனில் 'ஸ்பைடர்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவன், அடுத்ததாக மணிரத்னம் இயக்கவுள்ள மல்டி ஸ்டாரர் படத்திற்கு கேமராவை தூக்க இருக்கிறார். அதை முடித்துவிட்டு மம்முட்டி படத்திற்கான டைரக்சன் தொப்பியை அணிவார் என்று தெரிகிறது.