சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன்பிறகு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த வேடம் அவரை பேச வைத்தது. என்றாலும், தமிழ் சினிமாவில் அதன்பிறகு கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கிற்கு சென்று பல படங்களில் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ்.
தமிழுக்கு வருவதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடித்து வந்த நிவேதா தாமஸ், நானியுடன் நடித்த ஜென்டில்மேன் படத்திற்காக சில விருதுகளை பெற்றார். அதன்பிறகு நின்னுகோரி என்ற படத்தில் நானியுடன் நடித்த அவர் தற்போது ஜூனியர் என்டிஆரின் ஜெய்லவகுசா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இதில், ஜெய்லவகுசா படத்தில் அவர் கிளாமராக நடித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. முந்தைய படங்களை விட சற்று கூடுதல் கிளாமரை வெளிப்படுத்தியிருக்கும் நிவேதா, எப்போதுமே கிளாமரில் தான் லிமிட் தாண்டமாட்டேன் என்கிறார். தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.