சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள பெண்ணை அடையாளம் தெரிகின்றதா..? இன்றைய தலைமுறை ரசிகர்கள் மட்டுமல்ல, ஒரு காலத்தில் இவரை ஆராதித்த ரசிகர்கள் கூட கொஞ்சம் திணறித்தான் போவார்கள். இவர் மணிரத்னம் பட நாயகி என்றால் நம்ப முடிகிறதா..? 1989ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படம் 'இதயத்தை திருடாதே' என்கிற பெயரில் தமிழிலும் வெளியானது.. அந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கிறங்கடித்த கிரிஜா தான் மேலே உள்ள படத்தில் உள்ளவர்.
சூட்டோடு சூடாக அந்த சமயத்தில் மலையாளத்தில் பிரியதர்ஷன் டைரக்சனில் மோகன்லாலுடன் 'வந்தனம்' படத்தில் ஜோடியாக நடித்தார் கிரிஜா. அங்கும் கிரிஜாவின் செல்வாக்கு பரவவே, மீண்டும் மோகன்லாலையும் கிரிஜாவையும் வைத்து தனுஷ்கோடி என்கிற படத்தை இயக்கினார். ஆனால் இந்தப்படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது சோகம். 2002ல் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட், மணிரத்னம் இயக்கத்தில் உருவான துணிச்சலான பெண் கதாபாத்திரங்கள் என ஐந்து கதாநாயகிகளை தேர்ந்தெடுத்தனர். அதில் இதயத்தை திருடாதே படத்தில் கிரிஜா நடித்த பிரியா கேரக்டரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது..