சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'இது நம்ம ஆளு'. இப்படத்தை 'பசங்க' பாண்டிராஜ் இயக்கியிருந்தார். நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெளிவந்தது. இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. தெலுங்கில் 'சரசுடு' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் 'சரசுடு' படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.
இப்படத்தின் தமிழ் பதிப்பை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தன. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டது. சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.