அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
விஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் ரிச்சாகி விட்டது. அதோடு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்கள் கவர்ச்சியாக உடையணிவது, ஆபாசமாக பேசுவது போன்ற விசயங்கள் சர்ச்சையாகியிருக்கிறது. இதனால் எதிர்பார்த்ததை விடவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறி விட்டது. அதேசமயம் ஓவியா, ஜூலி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் நிகழ்ச்சி டல்லடிக்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் மா டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று அந்த நிகழ்ச்சி சூடு பிடிக்கவில்லை. ஆனபோதும் தமிழில் ஓவியாவை கிளாமராக டிரஸ் அணிந்தது, சிலரை ஆபாசமாக பேச வைத்து சர்ச்சை ஏற்படுத்தியது போல் இல்லாமல், ஏதேனும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தி விடப்போகிறார்களாம். அதனால் இன்னும் சில புதிய நடிகர் நடிகைகளை தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இறக்கி விட தயாராகி வருகிறார்கள்.