சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'36 வயதினிலே' இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தற்போது நிவின்பாலியை வைத்து மலையாளத்தில் தான் இயக்கவுள்ள 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தில் நிவின்பாலியின் தோற்றத்தை அவுட்லைனாக வெளியிட்டுள்ளார். மேலே உள்ள புகைப்படத்தில் பார்ப்பதற்கு, சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரன் போன்ற கெட்டப்பில் காட்சியளிக்கும் நிவின்பாலி, உண்மையிலேயே இந்தப்படத்தில் மிகப்பெரிய கொள்ளைக்காரனாக நடித்துள்ளார் என்பது தான் ஹைலைட்டான விஷயம்.
1980களில் கேரளாவில் நிஜமாகவே வாழ்ந்த மிக பயங்கர கொள்ளையன் தான் இந்த 'காயம்குளம் கொச்சுண்ணி', கேரளா பார்டரை விட்டு தாண்டிவந்து தமிழக எல்லைப்பகுதியில் திருடுவதில் பெயர் போனவர் இவர். அதிலும் களரி சண்டையில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பார்கள். இவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் இந்தப்படத்தில் படமாக்கவுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். அதனால் இந்த கேரக்டரில் நடிக்கும் நிவின்பாலியும் இந்தப்படத்திற்காக களரி சண்டை பயிற்சியெல்லாம் கற்றுக்கொண்டுள்ளாராம்.. படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.