சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அறிமுகமான காலகட்டத்தில் மலையாள நடிகர் நிவின்பாலிக்கு மிகவும் பிரேக் கொடுத்த படம் தான் 'தட்டத்தின் மறயத்து'. இந்தப்படம் ரிலீஸாகி இன்று ஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப்படமாகட்டும், இதற்கு முன்னாள் வெளியாகிய இவரது முதல் படமான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படமாகட்டும் இரண்டையும் இயக்கி நிவின்பாலியை ஒரு கதாநாயகனாக ஆக்கிய பெருமை இயக்குனரும், நடிகருமான வினீத் சீனிவாசனையே சேரும். கடந்த வருடம் மீண்டும் இவர்கள் இணைந்த 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்ஜியம்' படமு வழக்கம்போல வெற்றிவாகை சூடியது..
நடிகர்களாக இவர்கள் இணைந்து நடித்த 'ஒரு வடக்கன் செல்பி' மற்றும், 'ஓம் சாந்தி ஓசானா' ஆகிய படங்களும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இடம் பிடித்தன. இவர்கள் இருவரது கூட்டணியை பற்றி இவ்வளவு சிலாகித்து சொல்வதற்கு காரணம் இருக்கிறது. 'தட்டத்தின் மறயத்து' படத்தின் ட்ரெய்லரை தனது பேஸ்புக்கில் வெளியிட்டு பழைய ஞாபகங்களை நினைவு கூர்ந்துள்ள நிவின்பாலி, ரசிகர்களே உங்களுக்கு ஜூலை-8ல் ஒரு ஆச்சர்யமான செய்தி காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு தங்களது கமெண்ட்டுகளை பதிலாக அளித்துள்ள பலரும் நிவின்பாலியும், வினீத் சீனிவாசனும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்பது தான் அந்த சஸ்பென்ஸ் என பதிலாக கூறியுள்ளனர். ஒருவேளை நிவின்பாலி சொல்லப்போகும் விஷயம் அதுவாக கூட இருக்கலாமோ என்னவோ..?