சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாள நடிகர் திலீப் இந்த சம்மரில் தனது மனைவி காவ்யா மாதவன் மற்றும் மகள் மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு சென்று ஒரு மாதம் திலீப் ஷோ-2017 என்கிற நிகழ்ச்சியை நடத்திவிட்டு வந்தார். இந்த நிகழ்ச்சியை திலீப்பின் நண்பரும் பிரபல மலையாள இயக்குனரான நாதிர்ஷா தான் இயக்கினார். இந்த ஷோவில் முக்கியமான நபராக கலந்துகொள்வதாக வாக்களித்திருந்தார் நடிகை மம்தா மோகன்தாஸ்.. ஆனால் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக திலீப்பின் மனைவியான நடிகை காவ்யா மாதவன் பங்கு பெற்றார்.
இதுதவிர மலையாள நடிகை நமீதா பிரமோத்தும் இந்த ஷோவில் கலந்துகொண்டார்... ஆனால் அந்த நிகழ்ச்சிக்காக அங்கே தங்கியிருந்த நாட்களில் காவ்யா மாதவனுக்கு நமீதா பிரமோத்துக்கும் சின்னச்சின்ன உரசல்கள் ஏற்பட்டது என்றும் அதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் செய்திகள் பரவின..
ஆனால் இந்த செய்திகள் குறித்து மீடியாவில் விளக்கம் அளித்த நமீதா பிரமோத், காவ்யா மாதவனுக்கு தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சோஷியல் மீடியாவில் சிலர்தான் இப்படி தேவையில்லாமல் கிளப்பி விடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்..
மேலும் இப்படி வந்த செய்திகளை அப்படியே காவ்யா மாதவனுக்கு பார்வேர்டு பண்ணி வைத்தாராம் நமீதா.. அதைப்படித்துவிட்டு சிரித்த காவ்யா மாதவன், இதுபோன்ற செய்திகள் ஏதாவது கிளம்பத்தான் செய்யும் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உன் நேரத்தை வீணடிக்காதே” என சிரித்தாராம். இந்த நமீதா பிரமோத் தான் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..