சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிறந்த குழந்தைக்கு கார் ஓட்ட தெரியுமா என்ன..? ஆனால் தனது மகிழ்ச்சியின் உச்சத்தை வெளிப்படுத்த சமீபத்தில் பிறந்த தனது பெண் குழந்தைக்கு பரிசாக கார் வாங்கி இருக்கிறார் மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி. கடந்த சில தினங்களுக்கு முன் நிவின்பாலி அழகான பெண் குழந்தைக்கு தந்தையானார். அந்த குழந்தை இனி எங்கு அழைத்துச்செல்லப்பட்டாலும் அதற்காகவே ஒரு மினி கூப்பர் கரை வாங்கியுள்ளார் நிவின்பாலி.
நிவின்பாலியும் அவரது மனைவி ரீனாவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அந்த அன்பின் அடையாளமாக ஏற்கனவே நான்கு வயதில் தாவீத் என்கிற மகன் இருக்கிறான். இப்பொது இந்த பெண் குழந்தையின் வரவு நிவின்பாலியின் குடும்பத்தை ரொம்பவே உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நடிகர் துல்கர் சல்மானு அழகான பெண் குழந்தைக்கு தந்தையானார் என்பது குறிப்பிடத்தக்கது.