சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மம்முட்டி-திலீப் நடித்த 'கம்மத் & கம்மத்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகில் கால் பதித்த தனுஷ், அடுத்து இப்போது ஒரு தயாரிப்பாளராகவும் மலையாள திரையுலகில் தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். ஆம். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தை மலையாளத்தில் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே துவங்கி நடைபெற்று வருகிறது... இந்தப்படத்தை டோமினிக் அருண் என்பவர் இயக்குகிறார்.
சமீபகாலமாக மலையாள திரையுலகில் வளர்ந்துவரும் நாயகனான டொவினோ தாமஸ் தான் இந்தப்படத்தின் ஹீரோவாக நடிக்கிறார்.. இந்தப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.. இவர் தவிர இன்னொரு நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மலையாள இளம் நடிகரான உன்னி முகுந்தன்.. இவர் ஏற்கனவே கடந்த ஏழு வருடங்களுக்கு முன் தனுஷ் கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் நடித்த சீடன் படத்தில், கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப்படத்தில் இருவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் என எதுவும் இல்லாவிட்டாலும் அந்தப்படத்தில் இணைந்து பணியாற்றிய நட்பின் அடிப்படையில் இந்தப்படத்தில் உன்னி முகுந்தனுக்கு தனுஷ் வாய்ப்பளித்திருப்பதாக தெரிகிறது.