சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படத்தில் விஜய்யின் தங்கை கம்யூனிம்சம்னா என்னண்ணா என விஜய்யிடம் கேட்பார்.. அதற்கு விஜய் “உன் பசி தீர்ந்ததுக்கு அப்புறம் நீ சாப்பிடுற இட்லி இன்னொருத்தனுதுன்னு: விளக்கம் சொல்லி இருப்பார். கம்யூனிசம் என்றால் என்ன என தலைவர்கள், பேச்சாளர்கள் ஆளாளுக்கு விளக்கம் சொன்னாலும் கூட கத்தி படத்தில் விஜய் விளக்கம் (!) சொன்ன பின் தான் பாமர ரசிகனுக்கும் கூட அட இதுதான் கம்யூனிசமா என எளிதாக புரிந்தது.. கிட்டத்தட்ட அதேபாணியில் இப்போது துல்கர் சல்மானும் கம்யூனிஷத்துக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்..
நேற்று முன் தினம் துல்கர் சல்மான் நடித்த 'காம்ரேட் இன் அமெரிக்கா' படம் வெளியானது. இந்தப்படத்தில் துல்கர் கம்யூனிஷ்ட்டாக நடித்துள்ளார்.. துல்கரை காதலிக்கும் நாயகி கார்த்திகா முரளிதரன் துல்கரிடம் கம்யூனிஷம்னா என்ன என்று கேட்பார். அதற்கு துல்கர் நீ ஸ்கூல் படிக்கிறப்ப, உன்னோட பிரண்ட் லன்ச் கொண்டு வரலைன்னா நீ என்ன செய்வ என கேட்பார்.. அதற்கு நாயகி, என்னுடைய சாப்பாட்டை அவளுக்கும் ஷேர் செய்து சாப்பிடுவேன்' என்பார்.. உடனே துல்கர் அதுதான் கம்யூனிஷம் என்பார்.. ஆக சாப்பாட்டை உதாரணமாக வைத்துதான் கம்யூனிஷத்தை எளிதாக விளக்க முடியும் என சினிமாக்காரர்கள் நினைத்துவிட்டார்களோ...?..