சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராய்டு திரைப்படம் திரைக்கு தயாராகி விட்டது. இயக்குனர் டோலி இயக்கத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடிக்கும் கட்டமராய்டு திரைப்படம் அஜித் தமன்னா நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக். மார்ச் 24ல் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. கட்டமராய்டு படத்திற்கு பின்னர் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் படத்தை மைதிரி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ளார்.
பவன் கல்யாண் நடிப்பில் கண்டிரீக, ரபாஷா போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் மூன்றாவது முறையாக பவன் கல்யாண் படத்தை இயக்கவுள்ளார். இப்படம் விஜய் நடிப்பில் தமிழில் வெளிவந்த தெறி படத்தின் தெலுங்கு ரீமேக் என கூறப்படுகின்றது. வீரம் படத்தின் ரீமேக்கிற்கான கட்டமராய்டு படத்திற்கு பின்னர் அஜித்தின் விவேகம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் விஜய்யின் தெறி படத்தின் மீது பவன் கல்யாணின் பார்வை சென்றுள்ளது.