சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
வருண் தேஜ் மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வால் நடிப்பில் ‛கஞ்சே' எனும் திரைப்படத்தில் தனது வெற்றி முத்திரையை பதித்த இயக்குனர் க்ரிஷிற்கு அப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் பாலகிருஷ்ணாவின் சரித்திர படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலகிருஷ்ணா மற்றும் ஸ்ரேயா நடிப்பில் கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர படத்தை இயக்கி க்ரிஷ் பாராட்டுக்களை குவித்தார். அதனைத்தொடர்ந்து க்ரிஷ் இயக்கும் படத்தில் வெங்கடேஷ் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இதனிடையே க்ரிஷ் தான் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக கல்யாண் ராம் நடிப்பதாகக் கூறியுள்ளார். பூரி ஜெகன் நாத்தின் ஐஎஸ்எம் படத்தில் இறுதியாக கல்யாண் ராம் நடித்திருந்தார். அப்படத்தின் தோல்விக்கு பின்னர் வேறு படங்களில் நடிக்காத கல்யாண் ராம், க்ரிஷ் படத்தை தேர்வு செய்துள்ளார். தனது சகோதரர் ஜூனியர் என்.டி.ஆரின் ஜெய் லவகுச படத்தை தயாரித்து வரும் கல்யாண் ராம் விரைவில் க்ரிஷ் திரைப்படம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.