சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் திரைக்கு தயாராகி வரும் ‛ரோக்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாலிவுட் கவர்ச்சி கன்னி நடிகை சன்னி லியோன் குத்தாட்டம் போடவுள்ளதாக டோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது. புதுமுகம் இஷான் நாயகனாக நடிக்கும் ரோக் படத்தில் நடிகைகள் மன்னாரா சோப்ரா மற்றும் ஏஞ்சலா நாயகிகளாக நடிக்கின்றனர். படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாடல்கள் வெளியீட்டு விழா இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் குத்தாட்ட பாடலுக்கு மேடையில் நடனமாடவுள்ளாராம். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் திரைக்கு வரும் ரோக் படத்தை நாயகன் இஷானின் தந்தை மனோகர் தயாரிக்கின்றார். கோடை விடுமுறை கொண்டாட்டமாக ரோக் படத்தை ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் வெளியிட பூரி ஜெகன் நாத் திட்டமிட்டுள்ளார்.