சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மறைந்த மூத்த நடிகர் அக்கிகேனின் நாகேஷ்வர ராவ் அவரது மகன் நாகார்ஜூனா மற்றும் நாகார்ஜூனாவின் மகன்கள் நாகசைதன்யா, அகில் அகியோர் இணைந்து நடித்த மனம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நாகேஷ்வரராவின் கடைசி படமாகவும் அமைந்த மனம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நாகார்ஜூனா மற்றும் நாகசைதன்யா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக சில தினங்களாகவே டோலிவுட்டில் தகவல் பரவி வருகின்றது. உண்மையில் இயக்குனர் சதீஸ் என்பவர் மீண்டும் அக்கினேனி ஹீரோக்களை இணைந்து நடிக்கும் வண்ணம் ஒரு கதையை தயார் செய்து நாகார்ஜூனாவின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். இதுவே மனம்-2 என டோலிவுட் முழுவதும் பரவியது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். நாகார்ஜூனா தனது டுவிட்டர் பக்கத்தில் நாகசைதன்யாவும் நானும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக கேள்விப்பட்டு வருகின்றேன். எனக்கே இது செய்தி தான் என்று பதிவிட்டுள்ளார். ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தில் நாகார்ஜூனா நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. நாகசைதன்யாவும் சொக்கடே சின்னி நயன் படப்புகழ் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.