சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கன்னட, மலையாளத்தில் பல படங்களில் நடித்து விட்டு ஆதி நடித்த யாகவராயினும் நா காக்க படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த டார்லிங் படம் முதல் படமாக வெளியாகி வெற்றி பெற்றதால் தமிழில் ராசியான நடிகையாகி விட்டார் நிக்கி கல்ராணி. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அதோடு சில படங்களில் கவர்ச்சி புயலாகவும் உருவெடுத்துள்ளார் நிக்கி கல்ராணி.
இந்த நேரத்தில், தெலுங்கிலும் அழுத்தமாக கால்பதித்து விட வேண்டும் என்பது நிக்கியின் ஆசையாக உளளது. அதற்காக சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்தை கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்துள்ளார் அவர். ஆனால், தெலுங்கில் நிக்கி கல்ராணி சுனிலுடன் நடித்த கிருஷ்ணாஷ்டமி என்ற முதல் படமே படுதோல்வி அடைந்ததால், அவர் மீது தோல்விப்பட நாயகி என் கிற முத்திரை அழுத்தமாக பதிந்துள்ளதாம். அதனால், மீண்டும் தெலுங்கில் காலூன்ற நிக்கி கல்ராணி எடுத்து முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டதாம். அதனால் சரியான நேரம் வரும்போது தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கலாம் என்று பின்வாங்கி விட்டார் நிக்கி.