சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

டெக்னிகல் வேல்யூ அதிகம் உள்ள, மலையாளத்தில் உருவாகவுள்ள விமானம் என்கிற படத்தில் பிருத்விராஜ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே நாம் சில தகவல்களை சொல்லியிருக்கிறோம். உண்மையிலேயே உயிருடன் இருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப்படம் உருவாகிறது. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்தவர் தான் ஷாஜி தாமஸ்.. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார். அந்த ஷாஜியின் கதைதான் இந்த விமானம்..
இந்தப்படத்தில் விமானத்தை உருவாக்கும் ஷாஜி என்கிற இளம் விஞ்ஞானியின் கேரக்டரில் தான் நடிக்க இருக்கிறார் பிருத்விராஜ்.. இந்த கேரக்டரில் நடிக்கும் பிருத்விராஜ் வெறுமனே விமானத்தை உருவாகும் விஞ்ஞானியாக மட்டும் இல்லாமல், சில காட்சிகளில் சிறிய ரக பிளைட்டையும் ஓட்டவேண்டி இருக்கிறதாம். இதற்கான அடிப்படை நுணுக்கங்களை கற்றுக்கொள்ள தமிழ்நாட்டில் அம்பாசமுத்திரம் என்கிற ஊருக்கு பிருத்விராஜ் விசிட் அடிக்க இருக்கிறாராம்.
காரணம் அங்கேதான் ஆச்சர்யப்படும்படியாக ப்ளையிங் யார்ட் ஒன்று இருக்கிறது.. இதை சொந்தமாக வைத்திருப்பவர் முன்னாள் பைலட் எஸ்.கே.ஜே நாயர் என்பவர்.. இவரிடம் தான் விமானம் ஓட்டுவது குறித்து பாடங்களை கற்க இருக்கிறார் பிருத்விராஜ். தற்போது ரோஷிணி தினகர் என்பவரது டைரக்சனில் மை ஸ்டோரி என்கிற படத்துக்காக போர்ச்சுகலில் இருக்கும் பிருத்விராஜ் அந்தப்படத்தின் வேலைகளை முடித்துவிட்டு இந்த பயிற்சியில் ஈடுபட இருக்கிறாராம்.