சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கில் நாகார்ஜூனா நடித்து வரும் படம் ஓம் நமோ வெங்கடேசாய. ராகவேந்திரராவ் இயக்கி வரும் இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், விமலாராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல்பார்வை நேற்று வெளியானது. அதில் நாயகிகளில் ஒருவரான பிரக்யா ஜெய்ஸ்வால் 14 கிலோ தங்க நகையில் செய்த ஆடை அணிந்து நடனமாடிய காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
மேலும், அதுகுறித்து தெலுங்கு சினிமா உலகினர் பலரும் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அப்பட நாயகன் நாகார்ஜூனாவும், 14 கிலோ தங்கத்தில் செய்த ஆடையை கட்டிக்கொண்டு ஆடுவது கடினம். ஆனபோதும் அவர் அற்புதமாக ஆடியிருக்கிறார். அவரது நடனம் அந்த தங்கத்தை விட சுத்தமானதாக உள்ளது என்று தனது வியப்பினையும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.