சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள ஜனதா கேரேஜ் திரைப்படம் இன்று(செப்டம்பர் 1) திரைக்கு வந்துள்ளது. மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கொரட்டாலா சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். சமந்தா நித்யா மேனன் என இரு நாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளனர். இன்று திரைக்கு வந்துள்ள இப்படம் வெற்றி அடைய படக்குழுவினருக்கு டோலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராம், மஞ்சு மனோஜ், ரகுல் ப்ரீத்தி சிங், இயக்குனர் அணில் ரவிபுடி, மற்றும் பலர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் படக்குழுவிற்கு ஜனதா கேரேஜ் திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று நடைபெற்ற ஜனதா கேரேஜ் படத்தின் சிறப்பு திரையிடலிலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் பிரபல இயக்குனர் ராஜமௌலியும் கலந்து கொண்டு படத்தைப் பார்த்துள்ளார்.
படம் பார்த்து திருப்தி அடைந்த ராஜமௌலி ஜனதா கேரேஜ் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜமௌலியின் முதல் பட நாயகனான ஜூனியர் என்.டி.ஆர் அவரது பாசத்திற்கு உரியவர் என்பது அறிந்ததே. மைத்திரி மூவீஸ் தயாரித்துள்ள ஜனதா கேரேஜ் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.