சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
திருமணத்திற்கு பிறகு செலக்டிவான படங்களாக மட்டுமே ஒப்புக்கொள்கிறார் அமலாபால் என்கிற பேச்சு இங்கே ஓடிக்கொண்டு இருக்க, மலையாளத்திலும் தற்போது 'ஷாஜகானும் பரீக்குட்டியும்' என்கிற படத்தில் நடித்துள்ளார் அமலாபால். ஆனால் ட்ரைலரை பார்த்தால் பசங்க-2, அம்மா கணக்கு என சோஷியல் மெசேஜ் எதுவும் இல்லாத கதையாகத்தான் அந்தப்படம் தென்படுகிறது. அமலாபாலை ஜெயசூர்யா, குஞ்சாக்கோ போபன், அஜு வர்கீஸ் என மூன்றுபேர் காதலிப்பதாகத்தான் டீசரும் பாடலும் சொல்கின்றன..
இது ஒரு பக்கம் இருக்க இந்தப்படத்தில் தனது உயிரை பணயம் வைத்து வானத்தில் பறக்கும் காட்சியில் நடித்துள்ளார் அமலாபால். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள வாகாமன் என்கிற பகுதியில் நடைபெற்றது. சுற்றுலா தளமான அங்கே பாரா கிளைடிங் வசதியும் உண்டு.. இதை பாடல் காட்சியில் பயன்படுத்த நினைத்த இயக்குனர் போபன் சாமுவேல் அமலாபாலிடம் இது குறித்து பேசினாராம்... இதற்கு முன் கிளைடரில் பறந்த அனுபவம் அமலாபாலுக்கு இல்லை.. ஏன் சாகசம் என்பதையே இப்போது தான் முதன்முறையாக மேற்கொள்ளப்போகிறோம் என நினைத்த அமலாபால் இந்த காட்சியில் உயரை பணயம் வைத்து நடித்ததாக கூறியுள்ளார். வரும் ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக இந்தப்படம் வெளியாகவுள்ளது.