சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இந்திய அளவில் அறியப்படும் நடிகராக உயர்ந்துவிட்ட பாகுபலி நாயகன் பிரபாஸ் தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகளில் பிசியாகவுள்ளார். இப்படத்தை முடித்த பின்னர் இயக்குனர் சுஜீத் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் நடிக்கும் போதே சுஜீத் இயக்கத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமானார்.
ஆனால் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாகத்தையும் இயக்குனர் ராஜமௌலி துவங்கிவிட்டதால் சுஜீத் படத்தை பிரபாஸ் ஒத்தி வைத்தார். பிரபாஸிற்காக அதிரடி ஆக்ஷன் கதையை தயார் செய்துள்ள சுஜீத் தற்போது அவருக்காக காத்திருக்கின்றார். பாகுபலி 2 படத்தை முடித்த பின்னர் அக்டோபரில் சுஜீத் படத்தில் பிரபாஸ் நடிப்பார் என கூறப்படுகின்றது. எமி ஜாக்சன் இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தில் நீல் நிதின் முகேஷ் பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன