சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பத்து வருடங்களுக்கு முந்தைய அம்மன் படங்களை பார்த்தீர்கள் என்றால் அதில் பெரும்பாலான படங்களில் ரம்யா கிருஷ்ணன் தான் அம்மனாக நடித்திருப்பார்.. அப்படி இல்லையென்றால் அம்மனின் தீவிர பக்தையாக நடித்திருப்பார். அந்தப்படங்களில் கட்டாயம் ஒரு அம்மன் பாடல் இடம்பெற்றிருக்கும். அதில் ரம்யா கிருஷ்ணனின் உக்கிரமான நடனமும் இடம்பெற்று ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும். நீண்ட நாட்களாக ரசிகர்கள் பார்க்கமுடியாத ரம்யா கிருஷ்ணனின் நடனத்தை இப்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் ரசிகர்கள் காண வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
ஆனால் இந்த வாய்ப்பு தமிழ் ரசிகர்களுக்கு அல்ல.. மலையாள ரசிகர்களுக்கு... ஆம் மலையாளத்தில் தற்போது ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள 'ஆடுபுலியாட்டம்' படத்தில் தான் அம்மன் நடனம் ஆடுகிறார் ரம்யா கிருஷ்ணன்.. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்பாடல் தமிழிலேயே இடம்பெற்று இருப்பதும் அதை நடிகை மம்தா மோகன்தாஸ் பாடியிருப்பதும் தான். அதனால் இந்தப்பாடலை தமிழ் ரசிகர்கள் யூடியூப்பில் கூட கண்டு மகிழலாம். ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.