சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
எவர்கிரீன் நட்புகூட்டணியான மோகன்லால்-பிரியதர்ஷன் இருவரும் தற்போது 'ஒப்பம்' பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்கள்.. இன்டலிஜன்ட் த்ரில்லர் வகைப்படமாக உருவாகும் இதில் மோகன்லால் கன் பார்வையற்ற லிப்ட் ஆபரேட்டராக நடிக்கிறார். சமீபத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மோகன்லால் தனக்கு சொல்லும் அட்வைஸ்கள் தான்தான் தோல்வியில் துவண்டிருந்த நேரங்களில் தனக்கு உற்சாகம் தந்து மீண்டெழ வைத்தது என கோரியுள்ளார். மேலும் டைரக்சனை விட்டு கொஞ்சநாள் தன்னை ஓய்வெடுக்க மோகன்லால் சொன்னதாகவும் கூறி ஆச்சர்யப்படுத்தினார்.. என்ன..? பிசியான இயக்குனரை ஓய்வெடுக்க சொல்வதா என்றுதானே தோன்றுகிறது.. விஷயம் இருக்கிறது..
பல வருடங்களுக்கு முன்பு ஒருசமயம் பிரியதர்ஷன் தொடர் ஹிட்டுகளாக கொடுத்து வந்தார் அந்த நேரத்தில் உடனாடியாக அவர் இயக்கி ரிலீஸ் செய்த படம் ஒன்று அட்டர் பிளாப் ஆனது.. அந்தசமயத்தில் மோகன்லால் பிரியதர்ஷனை அழைத்து கொஞ்சநாள் சினிமாவை விட்டு விலகி இருக்கும்படி கூறினாராம். மோகன்லால் அப்படி சொன்னதற்கும் காரணம் உண்டு. ஒரு மனிதனின் தொடர் வெற்றிகள் அவனுக்கு அளவுக்கதிகமான தன்னம்பிக்கையை கொடுக்கும்.. அதுதான் அவனை தவறு பண்ண தூண்டும் என்பது மோகன்லாலின் எண்ணம். அதன்படி சில நாட்கள் இடைவெளிவிட்டு வந்து பிரியதர்ஷன் மோகன்லாலை வைத்து இயக்கிய 'கிலுக்கம்' சூப்பர் டூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.