சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
படம் நன்றாக ஓடுகிறதுதான் வசூலை வாரி குவித்து வருகிறதுதான். இல்லை என்று சொல்லவில்லையே.. அதற்காக இந்த அளவுக்கு ஓவர் கான்பிடன்ஸ் இருக்க கூடாது மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப்பிற்கு. ஆம் அவரது '2 கண்ட்ரீஸ்' படத்தை பற்றித்தான் சொல்ல வருகிறோம். கடந்த கிறிஸ்துமஸ் வெளியீடாக டிச-25ஆம் தேதி வெளியான இந்தப்படம் நேற்றோடு 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த ஜன-26ஆம் தேதி அதாவது படம் வெளியாகி 30ஆம் நாளே 50வது நாள் போஸ்டர் டிசைனை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டார் திலீப்.
சரி... நீண்ட நாட்களாக ஒரு ஹிட்டுக்காக காத்திருந்த மனிதர் ஒரு ஆர்வத்தில் இப்படி பண்ணுகிறார் என நினைத்தால், நேற்று 50ஆம் நாளன்று 75வது நாள் போஸ்டர் டிசைனை வெளியிட்டு படம் இன்னும் ஓடும் என சூசகமாக உணர்த்தியுள்ளார் திலீப். படத்தின் இயக்குனர் ஷபியும் கதாசிரியர் ரபியும் படம் முழுவதும் நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தந்திருந்ததால் மவுத் டாக் வழியாகவே இந்தப்படம் பிக்கப் ஆனது. படத்தில் திலீப் ஜோடியாக மம்தா மோகன்தாஸும், காமெடிக்கு அஜூ வர்கீஸ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் திலீப்புடன் கைகோர்த்து இந்த வெற்றியை சாதகமாக்கியுள்ளனர்.