சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப வாரிசான நடிகர் சாய் தரண் தேஜ், பட்டாஸ் பட இயக்குனர் அணில் ரவுபுடி இயக்கத்தில் உருவாகும் சுப்ரீம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் சுப்ரீம் படத்தில் கார் டிரைவராக நடிக்கும் சாய் தரணுக்கு ஜோடியாக நடிகை ராக்ஷி கண்ணா நடிகின்றார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அல்லு அர்ஜுனின் சகோதரரும் நடிகருமான அல்லு சிரிஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தயாரிப்பாளர் தில் ராஜுவும், சாய் தரண் தேஜும் மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் இறுதி கட்டத்தை எட்டிய இப்படத்தின் படப்பிடிப்புகளை விரைவில் முடித்து படத்தை மார்ச்சியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.