சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் மற்றும் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சர்தார் கபார் சிங் திரைப்படத்தை நார்த் ஸ்டார்ஸ் எண்டர்டையின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில், இயக்குனர் ராவீந்திர பாபி இயக்கத்தில் நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் இடம் பெறும் அதிரடி ஆக்ஷன் மற்றும் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் தற்போது நடைபெறுகின்றதாம். இம்மாத இறுதி வரை ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு பிப்ரவரி மாதத்தில் கேரளா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கேரள வனப்பகுதிகளில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தெலுங்கு வருடப்பிறப்பான ஏப்ரல் 8 ஆம் தேதி இப்படம் வெளிவரும் என கூறப்படுகின்றது.