சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சாதனைகளில் மிகப்பெரிய சாதனையை பிருத்விராஜ் செய்துள்ளார் என்று சொன்னால் கூட அது சாதாரணமான பாராட்டாகத்தான் இருக்கும். மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள 'பாவாட' படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மார்த்தாண்டன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் தனது முந்திய படங்களின் ஸ்டைலிஷ் இளைஞன் என்பதை தாண்டி சராசரி கிராமத்து இளைஞாக நடித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் விட ஸ்பெஷல் என்னவென்றால் இவரது இந்தப்படத்திற்கு 'டப்' கொடுக்கும் விதமாக இன்னும் பல தியேட்டர்களில் இவரது முந்தைய மூன்று படங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன என்பதுதான்.
உண்மைதான். கடந்த செப்-19ல் 'என்னு நிண்டே மொய்தீன்', அக்-16ல் தனது 'அமர் அக்பர் ஆண்டனி' மற்றும் டிச-13ல் 'அனார்கலி' என வரிசையாக மூன்று படங்களை ரிலீஸ் செய்தார்.. மூன்றுமே ஹிட் மற்றும் அதற்கு மேலே என்பதால் இன்னும் கேரளாவின் பல தியேட்டர்களில் நான்ஸ்டாப்பாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் நான்காவது படமாக அவருடைய 'பாவாட' படமும் ரிலீஸ் ஆகியுள்ளது மலையாள சினிமா சரித்திரத்தில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது..