சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ரவி தேஜாவுடன் நடித்த 'கிக் 2', ராம் சரணுடன் நடித்த 'ப்ரூஸ் லீ' போன்ற படங்கள் வசூலில் சறுக்கலைச் சந்தித்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் ராகுல் ப்ரீத்தி சிங் பிசியாகவே உள்ளார். டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங், பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் சரைனொடு என்ற படத்தில் தற்போது நடித்து வருகின்றார். ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள நன்னுக்கு பிரேமதோ திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ் - இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இணையும் படத்தில் நாயகியாக நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங்கிடம் பேச்சு வார்த்தை துவங்கியுள்ளதாம். தயாரிப்பாளர் அபிஷேக் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு தயாரிப்பாளரின் தேர்வு நடிகை ஸ்ருதிஹாசன்.. ரூ 1.5 கோடி வரை ராகுல் ப்ரீத்தி சிங்க்கு சம்பளம் கிடைக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். இருப்பினும் இப்படத்தின் தயாரிப்பாளரின் ஆர்வத்தை அறிந்த ஸ்ருதிஹாசனும் இப்படத்தின் நாயகி வாய்ப்பை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம்.