அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
ப்ரூஸ் லீ படத்திற்கு பின்னர் தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ராம் சரண் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்படும் ஹிந்தி திரைப்படமொன்றிற்கு ராம் சரண் பின்னணி பேசியுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் நடித்துள்ள பிரேம் ரடன் தான் பயோ எனும் ஹிந்தி திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. தீபாவளி அன்று தெலுங்கிலும் திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு ராம் சரணே டப்பிங் பேச வேண்டும் என சல்மான் கான் விருப்பம் தெரிவித்திருந்தார். தனது நண்பரான சல்மான் கானின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ராம் சரண் கடந்த வாரம் முதல் இப்படத்திற்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது ராம் சரண் தனது டப்பிங்கை பேசி முடித்து விட்டதாக படக்குழுவினர் கூறுகின்றனர். பிரபல ஹிந்தி பட இயக்குனர் சூரஜ் பரஜடியா இயக்கி வரும் பிரேம் ரடன் தான் பயோ படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிகை சோனம் கபூர் நடிக்கின்றார்.