சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சினிமா நடிகைகளின் காதல் என்பது 'இருக்கு ஆனா இல்ல' டைப்பில் எப்போதும் ரசிகர்களை கண்ணாமூச்சி ஆட்டத்திலேயே வைத்திருக்கும்.. நயன்தாரா ஆடாத கண்ணாமூச்சி ஆட்டமா..? ஆனால் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்று லீக்காக, வெறும் வாய்க்கு அவல் கொடுத்து வசமாக சிக்கிவிட்டாரல்லவா..? அதேபோல இப்போது நடிகை மேக்னாராஜின் காதல் விவகாரமும் வெளியே கசிந்துள்ளது. ஆனால் இதில் மேக்னா ராஜ் புதுவித டெக்னிக்கில் தனது காதலைப்பற்றிய ஹின்ட் கொடுத்துள்ளார். தமிழில் காதல் சொல்ல வந்தேன்' படத்தில் அறிமுகமான மேக்னா ராஜ் கன்னடத்துக்காரர் என்றாலும் அவரை வளர்த்துவிட்டது எல்லாம் மலையாள சினிமா தான்.
ஆனாலும் இப்போது அவருக்கு காதல் பூத்துள்ளது கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவுடன் தானாம். இரண்டுபேரும் சேர்ந்து 'ஆட்டகரா' என்கிற படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் நெருப்பு பற்றிக்கொண்டதாக தெரிகிறது. மூன்று நாட்களுக்கு முன் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவ் சார்ஜாவின் பிறந்தநாளன்று மேக்னா டிவிட்டரில் தெரிவித்த வாழ்த்து செய்தியில் 'கொழுந்தனாரே' என கன்னடத்தில் அர்த்தம் வரும் வார்த்தை ஒன்றை கூறி, சந்தோஷமாக இரு என வாழ்த்தியுள்ளார். இது ஒன்று போதாதா..?